ரிலையன்ஸ் பவர் பங்குகள் ஏற்றத்திற்கான காரணம்
சென்னை, 11 அக்டோபர் (ஹி.ச.) அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பவர் பங்குகள் சுமார் 14% மேல் உயர்ந்து, அதன் முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. பிஎஸ்இ-இல் பங்கு விலை ஆரம்ப வர்த்தக அமர்வில் 14.06% உயர்ந்து ரூ.50.70 வரை விலை உயர்ந்தத
ரிலையன்ஸ் பவர் பங்குகள் ஏற்றத்திற்கான காரணம்


சென்னை, 11 அக்டோபர் (ஹி.ச.)

அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பவர் பங்குகள் சுமார் 14% மேல் உயர்ந்து, அதன் முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. பிஎஸ்இ-இல் பங்கு விலை ஆரம்ப வர்த்தக அமர்வில் 14.06% உயர்ந்து ரூ.50.70 வரை விலை உயர்ந்தது.

ரிலையன்ஸ் பவர் பங்குகள் உயர்விற்கு முக்கிய காரணம், அதிக அளவு வாங்கப்பட்டதுதான். சென்ற ஒரு வாரத்தில் மட்டும் ரிலையன்ஸ் பவரின் ஒரு வார சராசரி வர்த்தக அளவுகளான 2 கோடி பங்குகளுடன் ஒப்பிடும்போது, சுமார் 6 கோடி பங்குகள் பங்குச் சந்தைகளில் கைமாறியுள்ளன.

சென்ற வார தொடக்கத்தில், ரிலையன்ஸ் பவர், CLE பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனம் செபி விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படுவது தொடர்பாக செபியிடமிருந்து ஒரு ஷோ காஸ் நோட்டீஸைப் பெற்றதாக பங்குச் சந்தைகளுக்குத் தெரிவித்தது.

இருப்பினும், அனில் அம்பானி குழும நிறுவனமான ரிலையன்ஸ் பவர், அந்த நிறுவனத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்றும், பொருத்தமான சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் தெளிவுபடுத்தியது. இதனைத்தொடர்ந்து பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் வாங்கியதால் விலை உயர்வு ஏற்பட்டது.

ரிலையன்ஸ் பவர் பங்கு விலை கடந்த ஒரு மாதத்தில் 3% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது, ஆனால் மூன்று மாதங்களில் 25% க்கும் அதிகமாக சரிந்துள்ளது. ஸ்மால்கேப் பங்கான ரிலையன்ஸ் பவர் கடந்த ஆறு மாதங்களில் 24% உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இந்த ஆண்டு இதுவரை 8% மட்டுமே உயர்வை பதிவு செய்துள்ளது. ரிலையன்ஸ் பவர் பங்குகள் இரண்டு ஆண்டுகளில் 171% மல்டிபேக்கர் வருமானத்தையும், ஐந்து ஆண்டுகளில் 1,642% மகத்தான வருமானத்தையும் அளித்துள்ளன.

Hindusthan Samachar / JANAKI RAM