கடன் தொல்லையால் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரின் மகன் தூக்கிட்டு தற்கொலை
தென்காசி, 11 அக்டோபர் (ஹி.ச.) தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள காலங்கரை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் சுப்பிரமணி என்ற நபர் வசித்து வந்த நிலையில், அந்த நபர் இன்றைய தினம் அவரது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது
Death


தென்காசி, 11 அக்டோபர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள காலங்கரை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் சுப்பிரமணி என்ற நபர் வசித்து வந்த நிலையில், அந்த நபர் இன்றைய தினம் அவரது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து சென்ற செங்கோட்டை போலீசார் சுப்பிரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், சுப்பிரமணியின் தந்தையான மாடசாமி என்பவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் எனவும், சமீபத்தில் தாயையும், தந்தையும் இழந்த சுப்பிரமணி கடுமையான மன வேதனையில் இருந்து வந்த நிலையில், கடன் தொல்லையாலும் மன உளைச்சலுக்கு ஆளான காரணத்தினால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN