Enter your Email Address to subscribe to our newsletters
பெங்களூரு, 11 அக்டோபர் (ஹி.ச.)
தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக பெங்களூரு-சென்னை இடையே சிறப்பு ரெயில்களை இயக்க தென் மேற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
இது குறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கே.எஸ்.ஆர். பெங்களூரு-எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06255) வருகிற 18, 21, 25-ந்தேதிகளில் பெங்களூருவில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்டு அதே நாள் மதியம் 2.45 மணிக்கு சென்னையை சென்றடையும்.
மறுமார்க்கமாக எம்.ஜி.ஆர். சென்னை-கே.எஸ்.ஆர். பெங்களூரு சிறப்பு ரெயில் (06256) வருகிற 18, 21, 25-ந்தேதிகளில் சென்னையில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு அதே நாள் இரவு 10.45 மணிக்கு பெங்களூருவை வந்தடையும்.
இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் யஷ்வந்தபுரம், கே.ஆர்.புரம், பங்காருபேட்டை, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM