Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 11 அக்டோபர் (ஹி.ச.)
கோவை மாநகராட்சிக்கு சொத்து வரி உள்ளிட்ட வரியினங்கள் செலுத்த ஏதுவாக இன்றும், (அக் 11) நாளையும் (அக் 12) சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெறுகிறது.
கிழக்கு மண்டலத்தில், 56வது வார்டு ஒண்டிப்புதுார் சுங்கம் மைதானத்திலும், மேற்கு மண்டலத்தில் இன்று, 33வது கவுண்டம்பாளையம் மூவர் நகர் நுாலகத்திலும், நாளை, 39வது வார்டு சுண்டப்பாளையம் பெருமாள் கோவில் வளாகத்திலும் முகாம் நடைபெறுகிறது.
வடக்கு மண்டலத்தில், 25வது வார்டு காந்தி மாநகர் வார்டு அலுவலகம் அருகே செல்வ விநாயகர் கோவில் லைனிலும், தெற்கு மண்டலம், 94வது வார்டு மாச்சம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியிலும், மத்திய மண்டலம், 63வது வார்டு ராமநாதபுரம், மாநகராட்சி வணிக வளாகம், பெருமாள் கோவில் வீதியிலும் இரு நாட்கள் முகாம் நடைபெறுகின்றன.
காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இம்முகாமில், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்த வேண்டும் என கோவை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b