கோவையில் திடீர் மழை - குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி
கோவை, 11 அக்டோபர் (ஹி.ச.). .தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்நிலையில் கடந
Sudden rain in Coimbatore: Cool breeze delights the public!


Sudden rain in Coimbatore: Cool breeze delights the public!


கோவை, 11 அக்டோபர் (ஹி.ச.).

.தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் கோவையில் அதிகரித்து காணப்பட்டது.

இன்று காலை முதல் வெயில் காணப்பட்ட நிலையில் வானம் மேகமூட்டம் ஏற்பட்டு, திடீரென நகரில் பல்வேறு பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் சிறிது நேரம் கன மழை பெய்ததால் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

.இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Hindusthan Samachar / V.srini Vasan