Enter your Email Address to subscribe to our newsletters
மதுரை, 11 அக்டோபர் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து ஊராட்சிக்குட்பட்ட பெருமாள் கோவிலில் கிராம சபை கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், உதவி ஆட்சியர் உட்கர்ஷ் குமார், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
18 தீர்மானங்கள் இந்த கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் எந்த ஒரு ஜாதி பெயரும் இல்லாத கிராமங்களை கொண்டுள்ள கிராம ஊராட்சியாக இந்த சீமானுத்து ஊராட்சி இருப்பதும், சமத்துவத்துடன் இருப்பதும் பெருமைக்குறியது என மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் பாராட்டினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன்,
தமிழ்நாடு முழுவதும் உள்ள 12,525 ஊராட்சிகளுக்கும் இணைய வசதி ஏற்படுத்தி கொடுத்து மக்களிடம் பேசியது பெருமையாக உள்ளது.
இந்த அளவு வசதிகளை செய்து மக்களது பிரச்சினைகளை கேட்கும் ஒரு அரசாக இந்த அரசு உள்ளது.
அதிமுக கூட்டங்களில் தவெக கொடி பறக்க விடுவது குறித்த கேள்விக்கு, அது முக்கியமான பிரச்சினை இல்லை.
இந்தியாவில் எந்த முதல்வர் இது போன்று மக்களிடம் நேரடியாக பேசியுள்ளார்கள் அதை இன்று பெருமையாக பேச வேண்டும்.
58 கால்வாய்க்கு நிரந்தர அரசானை வழங்க வேண்டும் என அரசுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார் அது நடந்தால் நமது உசிலம்பட்டி பகுதிக்கு பெருமை தான் என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / Durai.J