Enter your Email Address to subscribe to our newsletters
கரூர், 11 அக்டோபர் (ஹி.ச.)
புரட்டாசி மாதம் பல்வேறு பெருமாள் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர், தான்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ஆலயம் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக குடும்பத்துடன் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருவதுடன் திருமுடி காணிக்கை உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடனையும் செய்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் தேரோட்டம் மற்றும் நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆலய பாலாலயம் பணி நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள திருத்தேர் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை ஒட்டி தான்தோன்றி மலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN