Enter your Email Address to subscribe to our newsletters
திருச்செந்தூர், 11 அக்டோபர் (ஹி.ச.)iu
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் தக்கார் ரா.அருள்முருகன் தலைமையில், நிர்வாக அலுவலக அரங்கில் நடைபெற்றது.
இதில், 5 கோடியே 28 லட்சத்து 4 ஆயிரத்து 38 ரூபாய், தங்கம் 1.9 கிலோ, வெள்ளி 72.25 கிலோ, பித்தளை 84.67 கிலோ, செம்பு 80.54 கிலோ மற்றும் 1922 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், இணை ஆணையர் க.ராமு, முதுநிலை கணக்கு அலுவலர் ராஜாராமன், உதவி ஆணையர்கள் செந்தில்குமார், தங்கம், நாகவேல், அலுவலக கண்காணிப்பாளர் ரோகிணி, ஆய்வர் செந்தில்நாயகி, மக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், சுப்பிரமணியன், கருப்பன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
மேலும். பொதுமக்கள் மத்தியில் கழிவறை கட்ட வேண்டும்.
பல்வேறு பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் நடவடிக்கை எடுப்பாரா? என்பது மக்கள் மத்தியில் பேச்சாக உள்ளது?
Hindusthan Samachar / Durai.J