Enter your Email Address to subscribe to our newsletters
திருப்பதி, 11 அக்டோபர் (ஹி.ச.)
புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்புக்குரியதாகும். இருந்தாலும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் மிக மிக விசேஷமான நாளாக கருதப்படுகிறது. அதிலும் இன்று (அக் 11) புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதால் அதிகாலை முதலே பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
உலகம் எங்கும் உள்ள பெருமாள் கோயில், ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட வைணவத் தலங்களில் பக்தர்கள் காலை முதலே திரளாக குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதால் கோயில்களிலும் சிறப்பு வழிபாடும், பூஜையும் நடைபெற்றது.
அந்த வகையில் உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இதனால் இலவச டோக்கன் பெறாமல் நேரடி இலவச தரிசனத்திற்காக வந்திருக்கும் பக்தர்கள் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி கும்பிட்டு செல்கின்றனர்.
எனவே நேரடி இலவச தரிசனத்திற்காக வந்திருக்கும் பக்தர்கள் தாங்கள் முறைக்காக சுமார் 24 மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது.
இலவச டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் 5 முதல் 7 மணி நேரமும் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் 3 முதல் 5 மணி நேரம் காத்திருந்து
ஏழுமலையானை வழிபடுகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b