Enter your Email Address to subscribe to our newsletters
திருச்சி, 11 அக்டோபர் (ஹி.ச.)
புரட்டாசி மாதம் நம்பெருமாளுக்கு உகந்த மாதமாகும், இம்மாதத்தில் சனிக்கிழமைகளில் விரதமிருந்து நம்பெருமாளை வழிபாடு செய்தால் நற்பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம்.
இன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி, 108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், மற்றும் பிறமாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாள், சக்கரத்தாழ்வார், கிருஷ்ணர் சன்னதி, தாயார் சன்னதியில் எள், மற்றும் நெய்விளக்கிட்டும் மற்றும் அணையாவிளக்கில் தாங்கள் கொண்டுவந்த நெய்யை ஊற்றி வழிபாடு செய்துவருகின்றனர்.
வரிசையில் நிற்கும் வயதான பக்தர்கள் வசதிக்காக இருக்கைகள் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
பக்தர்கள் வருகையையொட்டி கூட்டநெரிசலின்றி வழிபாடு செய்வதற்காக கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
Hindusthan Samachar / ANANDHAN