Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 11 அக்டோபர் (ஹி.ச.)
இந்தியாவில் உருவாகி, உலகளாவிய ஐடி நிறுவனங்களுக்கு கடும் போட்டியை அளித்து வரும் ஜோஹோ நிறுவனத்தின் பிரபலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தான் ஜோஹோ மெயிலுக்கு மாறியுள்ளதாகவும், இனி தன்னை அனைவரும் அதில் தொடர்பு கொள்ளலாம் என்றும் பதிவிட்டார். இது உள்நாட்டு மின்னஞ்சல் சேவையான ஜோஹோ மெயிலுக்கு ஒரு பெரிய விளம்பரமாக பார்க்கப்படுகின்றது.
ஜிமெயிலுக்கு விருப்பமான மாற்றாக ஜோஹோ மெயில் வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக தனியுரிமை சார்ந்த மற்றும் விளம்பரமில்லாத மின்னஞ்சல் அனுபவத்தைத் தேடும் பயனர்களிடையே இது அதிகமாக விரும்பப்படுகிறது.
தனிப்பயன் டொமைன்களுக்கான (custom domains) ஆதரவு, குழப்பம் இல்லாத இடைமுகம் மற்றும் வலுவான தனியுரிமை பாதுகாப்புகள் காரணமாக, இந்த சேவை நிபுணர்கள் மற்றும் சிறு வணிகங்களிடையே ஈர்ப்பைப் பெற்று வருகிறது.
இந்த மின்னஞ்சல் சேவை தனிப்பட்ட பயனர்கள், நிறுவனங்கள் என இரு தரப்பினருக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெப், மொபைல் மற்றும் IMAP/SMTP அணுகல், ஒருங்கிணைந்த தொடர்புகள், காலண்டர் மற்றும் ஒத்துழைப்பு கருவிகள் (Zoho Workplace) ஆகியவற்றை வழங்குகிறது.
ஜிமெயிலிலிருந்து ஜோஹோ மெயிலுக்கு மாற விரும்பும் பயனர்களுக்கு, அதற்கான செயல்முறை மிகவும் நேரடியானதாக இருக்கும். எந்த முக்கியமான தரவையும் இழக்காமல், பயனர்கள் தங்கள் மின்னஞ்சல்களை ஜோஹோ மெயிலுக்கு தடையின்றி நகர்த்த உதவும் ஒரு எளிய படிப்படியான வழிகாட்டியை இங்கே காணலாம்.
Gmail to Zoho Mail: முழு செயல்முறை இதோ
Zoho Mail கணக்கு உருவாக்கம்:
Zoho மெயிலுக்குச் சென்று நீங்கள் விரும்பும் திட்டத்தில் பதிவு செய்யவும். கஸ்டம் டொமைனுக்கு, உங்கள் டொமைனைச் சேர்த்து சரிபார்க்கவும், பயனர் கணக்குகளை உருவாக்கவும், ஒரு பிசினஸ்/வர்க்பிளேஸ் திட்டத்தைத் தேர்வுசெய்யவும்.
Gmail இல் IMAP ஐ எனேபிள் செய்யவும்:
Gmail -இல் லாக் இன் செய்யவும் > Settings (அனைத்து செட்டிங்சையும் காணவும்) > ஃபார்வர்டிங் மற்றும் POP/IMAP, பின் IMAP ஐ இயக்கவும். இது Zoho மெயில் உங்கள் Gmail தரவை அணுக அனுமதிக்கும்.
Zoho க்கு இம்போர்ட் செய்யவும்:
Zoho மெயில் செட்டிங்சில், இம்போர்ட்/எக்ஸ்போர்ட் பிரிவைத் திறக்கவும். செட்டிங்சில் > இம்போர்ட்/எக்ஸ்போர்ட் -க்கு செல்லவும். உங்கள் மின்னஞ்சல்கள், கோப்புறைகள் மற்றும் காண்டாக்டுகளை Gmail இலிருந்து Zoho மெயிலுக்கு இம்போர்ட் செய்ய இடம்பெயர்வு வழிகாட்டியைப் (Migration Wizard)பயன்படுத்தவும்.
மின்னஞ்சல் பகிர்தலை செட் அப் செய்யவும்:
உங்கள் புதிய கணக்கில் மின்னஞ்சல்களைப் பெறுவதைத் தொடர்ந்து உறுதிசெய்ய, Gmail செட்டிங்சிற்குச் சென்று Zoho மெயிலுக்கு மின்னஞ்சல் பகிர்தலை செட் அப் செய்யவும்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், ஜோஹோ மெயில் ஜிமெயிலுக்குப் பதிலாக தனியுரிமையை மையமாகக் கொண்ட ஒரு பிரபலமான மாற்றாக உருவெடுத்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM