ஜம்மு காஷ்மீர் மாநிலங்களவைத் தேர்தலுக்கான 3 பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு
புதுடெல்லி , 12 அக்டோபர் (ஹி.ச.) அக் 24ம் தேதி ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 4 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஜூம்மு காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி மூன்று வேட்பாளர்களை அக் 10 ஆம் தேதி அறிவித்தது. இந்நிலைய
ஜம்மு காஷ்மீர் மாநிலங்களவைத் தேர்தலுக்கான 3 பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு


புதுடெல்லி , 12 அக்டோபர் (ஹி.ச.)

அக் 24ம் தேதி ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 4 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

ஜூம்மு காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி மூன்று வேட்பாளர்களை அக் 10 ஆம் தேதி அறிவித்தது.

இந்நிலையில் இத்தேர்தலில் போட்டியிட 3 வேட்பாளர்களை பாஜக தற்போது அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் சத்பால் சர்மா, குலாம் முகமது மிர், ராகேஷ் மகாஜன் ஆகிய வேட்பாளர்களை பாஜக இன்று (அக் 12) அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் கட்சிகளின் பலம் அடிப்படையில், ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணி மூன்று இடங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது. பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், தேர்தலின்போது மற்ற கட்சிகளின் எம்எல்ஏக்களை ஈர்க்கும் நடவடிக்கைகளை பாஜக தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் காரணமாகவே, மூன்று வேட்பாளர்களை அது களத்தில் இறக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b