Enter your Email Address to subscribe to our newsletters
கிருஷ்ணகிரி, 12 அக்டோபர் (ஹி.ச.)
ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி இன்று (அக் 12) அதிகாலை 4 மணிக்கு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேரண்டபள்ளி வனப்பகுதியில் சென்ற போது முன் சென்ற பிக்கப் வாகனம் மீது மோதியது.
காருக்கு பின் தொடர்ந்து வந்த லாரியும் இந்த வாகனங்கள் மீது மோதியது. அடுத்தடுத்து வேறு சில வாகனங்களும் மோதின. இந்த விபத்தில் காரில் இருந்த நான்கு வாலிபர்கள் உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்களில் ஒருவர் சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த முகிலன், 30.
இவர் யுபிஎஸ்சி தேர்வுக்காக பெங்களூரு தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தவர் என்று தெரியவந்துள்ளது.
மற்ற மூவரும் யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b