Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 12 அக்டோபர் (ஹி.ச.)
கோவை புலியகுளத்தில், ஏரோ சிலம்பாட்ட அகாடமி சார்பில், திமுக கோவை மாநகர் மாவட்ட தொண்டரணி அமைப்பாளரும், சிலம்பாட்ட ஆசானுமான அர்ஜுனன் தலைமையில் மாபெரும் சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை.செந்தமிழ்ச் செல்வன் துவக்கி வைத்தார்.
இந்த சிலம்பாட்ட போட்டியில், கோவை, ஈரோடு, சிவகங்கை, திருப்பூர், தாராபுரம் பகுதிகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகளும், சான்றிதழ்களும் பரிசுகளாக வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சிலம்பாட்ட மூத்த ஆசான்கள் குணசேகரன், பழனிச்சாமி மற்றும் நமசிவாயம் ஆகியோர்களுக்கு விருதுகள் வழங்கி கொளரவிக்கப்பட்டது.
Hindusthan Samachar / V.srini Vasan