Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 12 அக்டோபர் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பகுதியில் செயல்பட்டவரும் மெய் அறக்கட்டளை வருடம் தோறும் ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை வரும் இருபதாம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில், 50 ஆதரவற்ற குழந்தைகளை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அழைத்து வந்து பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகள் மற்றும் பறவைகளை பார்வையிட வைத்ததோடு காமெடி திரைப்பட நடிகர்களான கிங் காங் மற்றும் முத்துக்காளை இருவரும் குழந்தைகளுடன் வண்டலூர் உயிரியல் பூங்கா முழுவதும் சுற்றிப் பார்த்ததுடன் தனது ஸ்டாண்ட் அப் காமெடி நகைச்சுவை காட்சிகளை அவர்கள் முன்னிலையில் நடித்து காண்பித்து குழந்தைகளை உற்சாகப்படுத்தினர்.
அது மட்டும் இன்றி அவர்களுடன் அமர்ந்து மதிய உணவு அருந்தியதோடு அனைவருக்கும் தீபாவளி பரிசு பொருட்களாக பட்டாசு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கி தீபாவளியை வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மேலும் ஆதரவற்ற குழந்தைகளுடன் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களுடன் தீபாவளி நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் தெரிவித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிங் காங் மற்றும் முத்துக்காளை,
தெய்வக் குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த தீபாவளி தான் சிறப்பான தீபாவளி அனைவரும் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட வேண்டும் என தெரிவித்தனர்.
மேலும் வண்டலூர் பூங்காவிற்கு வந்திருந்த நபர்கள் அவர்களுடன் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
Hindusthan Samachar / Durai.J