Enter your Email Address to subscribe to our newsletters
திருவண்ணாமலை, 12 அக்டோபர் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஏ.சி.எஸ்.நகர் பகுதியில் உள்ள பாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரி எம்.ஜீ.ஆர்.பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பாலாஜி கல்வியியல் கல்லுரிகள் என 1000 மாணவ மாணவியர்களுக்கு பட்டமளிப்பு விழாவானது ஏ.சி.எஸ்.கல்வி குழுமம் துணை தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் தலைமையிலும் திருமதி லலிதாலட்சுமிசண்முகம் முன்னிலையில் நடைபெற்றன.
மேலும் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகரும் இயக்குணரும்மான ஆர்.பாண்டியராஜன் பங்கேற்று மாணவ மாணவியர்களுக்கு சான்றுகளையும் கோப்பைகளும் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய பாண்டியராஜன்....
நான் திரைப்படத்தில் அழுவும் கதாப்பாத்திரத்தில் கண்களுக்கு லிக்கூடு போட்டுதான் அழுவதுபோல் நடித்தேன் ஆனால் நிஜ வாழ்க்கையில் என் மகன் பட்டம் பெற்றதை நான் கண்டு ஆனந்த கண்ணீர் விட்டு அழுதேன்.
மேலும் பட்டம் பெற்ற மாணவ மாணவியர்கள் தங்களின் சுய உழைப்பில் முதலாளியாக மாறி பலருக்கான வேலைவாய்ப்புகை கொடுங்கள் என்று கூறினார்.
Hindusthan Samachar / Durai.J