Enter your Email Address to subscribe to our newsletters
புதுடில்லி, 12 அக்டோபர் (ஹி.ச.)
பீகார் சட்டசபைக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 6 மற்றும்
11-ந் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
இதனை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 240 தொகுதிகளுக்கு உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மீதம் உள்ள 3 தொகுதிகளில் பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேற்றும் பேச்சுவார்த்தை நீடித்தது.
இதற்கிடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய மந்திரியுமான சிராக் பஸ்வான் அதிருப்தி அடைந்ததாக கூறப்பட்டது.
ஆனால் பீகார் மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் இதனை மறுத்தார். அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாக தெரிவித்தார். அதைப்போல மத்திய மந்திரி ஜித்தன் ராம் மஞ்சியும் கூறினார்.
இந்த நிலையில் பா.ஜ.க. கட்சியின் மத்தியக்குழு கூட்டம் டெல்லியில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இல்லத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் வேட்பாளர் பட்டியல் பற்றி விவாதிக்கப்பட்டு உள்ளது. வேட்பாளர் பட்டியல் இறுதியாகி விட்டதாகவும், அது இன்று வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
தேசிய தலைமை இதனை அறிவிக்கும் என கட்சியின் பீகார் மாநில தலைவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / JANAKI RAM