Enter your Email Address to subscribe to our newsletters
புதுடில்லி, 12 அக்டோபர் (ஹி.ச.)
பள்ளிகளில் கல்வி கட்டணம், சேர்க்கை மற்றும் தேர்வு கட்டணங்களை பணமாக வசூலிக்காமல் யு.பி.ஐ., செல்போன் வாலட்டுகள் மற்றும் நெட்பேங்கிங் போன்ற டிஜிட்டல் முறையில் வசூலிக்க அறிவுறுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
மாணவர்களுக்கான பல்வேறு கட்டணங்களை வசூலிப்பதில் நவீனத்தை புகுத்துமாறு மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதன் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுவதுடன், பெற்றோருக்கு பணம் செலுத்தும் வசதியும் எளிமையாகும்.
அதாவது பள்ளிக்கு செல்லாமலேயே வீட்டில் இருந்தே பணம் செலுத்த முடியும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்த அறிவும் மக்களிடம் அதிகரிக்கும் என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM