Enter your Email Address to subscribe to our newsletters
புதுடில்லி, 12 அக்டோபர் (ஹி.ச.)
டெல்லி மிருகக்காட்சிசாலை (National Zoological Park), இந்தியாவின் தேசிய உயிரியல் பூங்காவாகும்.
இது புது டெல்லியில் உள்ள 176 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது பல்வேறு வகையான விலங்குகளின் தாயகமாக விளங்குகிறது. இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.
இங்கு பார்வையாளர்களுக்கு குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம், பேட்டரி வாகனம், மற்றும் உணவகங்கள் போன்ற வசதிகள் உள்ளன.
டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் பறவைக் காய்ச்சல் பரவி, அடுத்தடுத்து ஏராளமான பறவைகள் உயிரிழந்தன.
இதையடுத்து, ஆகஸ்ட் 30ம் தேதி பூங்கா மூடப்பட்டது. மருந்து தெளித்தல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
மேலும், 15 நாட்களுக்கு ஒரு முறை விலங்குகள் மற்றும் பறவைகளிடம் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டன.
சமீபத்தில் நடத்திய பரிசோதனையில், பறவைக் காய்ச்சல் தொற்று எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, நவம்பர் முதல் வாரத்தில் டில்லி தேசிய உயிரியல் பூங்காவை பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM