Enter your Email Address to subscribe to our newsletters
திண்டுக்கல்
,12 அக்டோபர் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஹெல்பிங் ஹாட்ஸ் குழு இன்று அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வந்தனர்.
அவர்களோடு கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீடற்ற மக்களும், பல்வேறு தங்குமிடங்களில் தங்களது பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள்,சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட யாசகம் வாங்கக்கூடிய நபர்களை பயனாளிகளாக அழைத்து வந்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியரோடு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
வெளியில் இருந்து கோவிலை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நாங்கள் இன்று வந்து தண்டாயுதபாணியை தரிசனம் செய்தது எங்கள் வாழ்நாளில் நாங்கள் செய்த புண்ணியம் இவை அனைத்தும் உங்களால்தான் எங்களுக்கு கிடைத்தது என கோவிலை விட்டு வெளியே வந்த ஆதரவற்றோர் கண்கலங்கி மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்கச் செய்தது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்களோடு அமர்ந்து உணவு உண்ட காட்சி பக்தர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
Hindusthan Samachar / Durai.J