Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 12 அக்டோபர் (ஹி.ச.)
சென்னையில் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள சென்னை சர்வதேச மின்னணு விளையாட்டு சாம்பியன்ஷிப் குறித்து நேரு உள்விளையாட்டு அரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அரசு கூடுதல் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள்…
கடந்த ஆண்டு மின்னணு விளையாட்டு போட்டிகள் சோதனை முறையில் முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் இடம்பெற செய்து விளையாட்டுயாளர்களின் வரவேற்பு கண்டறியப்பட்டது.
அவர்களின் வரவேற்பு அதிகமாக இருந்த காரணத்தால இம்முறை 2025 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை போட்டியில் மின்னணு விளையாட்டுகள் இடம் பெற்றது.
உலக அளவில் மின்னணு போட்டிக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது, இந்தியாவில் முதன்மையான மின்னணு விளையாட்டுகள் மாநில போட்டி தொடரில் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
சென்னை சர்வதேச மின்னணு விளையாட்டு சாம்பியன்ஷிப் வரும் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர், இதற்கு பரிசு தொகையாக 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இந்த மின்னணு போட்டிக்கு என்று அரசு 4.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
நவம்பர் 7 முதல் 9 வரை முதற்கட்டமாகவும், 12 முதல் 14 வரை இரண்டாம் கட்டமாக போட்டிகள் நடைபெற உள்ளது. மின்னணு விளையாட்டுகளுக்கு இந்த முன்னெடுப்பு மைக்கலாக இருக்கும், ஒலிம்பிக் மற்றும் ஆசிய போட்டிகளில் மின்னணு விளையாட்டு இடம்பெற்று உள்ளது, இவ்வாறான சர்வதேச அளவிலான மின்னணு விளையாட்டு போட்டிகளில் நாம் விளையாட்டாளர்கள் கலந்து கொள்ள வெற்றி இது வழிவாக்கும் என தெரிவித்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ