ஆப்கன் அமைச்சர் அமீர்கான் முட்டாகியின் செய்தியாளர் சந்திப்பிற்கு பெண் நிருபர்களுக்கு அழைப்பு
புதுடெல்லி, 12 அக்டோபர் (ஹி.ச) அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கன் அமைச்சர் அமீர்கான் முட்டாகி நேற்று ( அக்டோபர் 11) உத்தரப்பிரதேசத்தின் சஹாரன்பூரில் உள்ள தாருல் உலூம் தியோபந்த் இஸ்லாமிய கல்வி நிறுவனத்துக்கு வருகை தந்தார். இது தொடர்ப
ஆப்கன் அமைச்சர் அமீர்கான் முட்டாகியின் செய்தியாளர் சந்திப்பிற்கு பெண் நிருபர்களுக்கு அழைப்பு


புதுடெல்லி, 12 அக்டோபர் (ஹி.ச)

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கன் அமைச்சர் அமீர்கான் முட்டாகி நேற்று

( அக்டோபர் 11) உத்தரப்பிரதேசத்தின் சஹாரன்பூரில் உள்ள தாருல் உலூம் தியோபந்த் இஸ்லாமிய கல்வி நிறுவனத்துக்கு வருகை தந்தார்.

இது தொடர்பாக விளக்கம் அளித்த தாருல் உலூம் நிகழ்ச்சியின் ஊடகப் பொறுப்பாளரும், தியோபந்த் மக்கள் தொடர்பு அதிகாரியுமான அஷ்ரப் உஸ்மானி கூறுகையில்,

முட்டாகியின் நிகழ்ச்சியில் யார் கலந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அலுவலகத்திலிருந்து எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. பெண் பத்திரிகையாளர்கள் வருகை குறித்து எங்கிருந்தும் எந்த உத்தரவும் வரவில்லை.

இந்த நிகழ்விற்கு எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள் வந்தனர். எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக பொது நிகழ்வை ரத்து செய்ய உள்ளூர் நிர்வாகம் பரிந்துரைத்ததால், ஆப்கானிஸ்தான் அமைச்சரின் உரை நடக்கவில்லை.

பெண் பத்திரிகையாளர்களை தனித்தனியாக உட்கார வைத்ததாக பல்வேறு விஷயங்கள் பரவின, இவை அனைத்தும் ஆதாரமற்றவை. இன்றைய நிகழ்வில் பெண் நிருபர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்பட்டனர். பெண் நிருபர்களுக்கான இருக்கை ஏற்பாடுகள், ஆண் நிருபர்களுடன் சேர்த்தே ஏற்பாடு செய்யப்பட்டன.

நெரிசல் அதிகமாக இருந்ததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்ததால், முட்டாகி டெல்லிக்குச் செல்வதற்கு முன்பு, விருந்தினர் மாளிகையில் உள்ள ஊடகவியலாளர்களை அவசரமாக ஒரு உரையாடலுக்கு அழைத்தோம்.

கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டாலும், ஆப்கானிஸ்தான் அமைச்சரின் நிகழ்வில் இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டது, பெண் பத்திரிகையாளர்கள் நிகழ்விலிருந்து விலக்கி வைக்கப்பட்டதாக வெளியான செய்திகளை மறுக்கும் அளவுக்குப் போதுமான ஆதாரமாக இருந்தது என்று அவர் கூறினார். மேலும் அந்த பெண் பத்திரிகையாளர்களின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தான் அமைச்சர் கடந்த அக் 10 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்தபோது பெண் பத்திரிகையாளர்களை அனுமதிக்காதது பெரும் சர்ச்சையாகியது. எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக விமர்சித்தன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி இன்று (அக் 12) டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார்.

இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பெண் நிருபர்களும் பங்கேற்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b