Enter your Email Address to subscribe to our newsletters
கள்ளக்குறிச்சி, 12 அக்டோபர் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாமந்தூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கூட்டரங்கில் தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் சிவக்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த மத்திய செயற்குழு கூட்டத்தில் மாநில பிரதிநிதிகள் மாநாடு நடத்துவது தொடர்பாகவும், மாநில மையத்திற்கு சென்னையில் அலுவலகம் அமைத்தல் சொந்த கட்டிடம் கட்டுதல் மற்றும் பழைய சேமநல நிதி திட்டம் அமல்படுத்த கோருதல், வருவாய்த்துறைக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மற்றும் அரசியல் நிலைபாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் இந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அரசு பணியாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும், வருவாய் பேரிடர் மேலாண்மை துறையை சிறப்பு துறையாக அறிவித்து மேம்படுத்தப்பட்ட ஊதியம் வருவாய் நிர்வாக ஆணையர் பரிந்துரைப்படி வழங்க வேண்டும், உங்களுடன் ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களுக்கு வருவாய் துறைக்கு வட்ட அளவில் துணை வட்டாட்சியர் என்ற அடிப்படையில் பணியிடங்களை தனியாக ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
Hindusthan Samachar / ANANDHAN