Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 12 அக்டோபர் (ஹி.ச.)
எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள காஸ் டெண்டரில், தகுதியான அனைத்து டேங்கர் லாரிகளுக்கும் அனுமதி வழங்கக்கோரி தென் மண்டல எல்பிஜி காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், கடந்த 9-ம் தேதி இரவு முதல் வேலைநிறுத்தம் தொடங்கினர்.
இவர்களின் போராட்டம் நேற்று (அக் 11) 3-வது நாளாக நீடித்தது. இதனால் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்லிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் அனுப்பும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே ஆயில் நிறுவன உயர் அதிகாரிகள் நேற்று காணொலி காட்சி மூலமாக சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இது குறித்து சங்கத்தின் தலைவர் சுந்தரராஜன் கூறுகையில்,
எங்களது கோரிக்கைகளை ஆயில் நிறுவன அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. எனவே பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எங்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடருகிறது. இன்றும் (அக் 12) பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதில் உடன்பாடு எட்டப்பட்டால் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படும்.
என்று அவர் தெரிவித்திருந்தார். அதன்படி சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது.
Hindusthan Samachar / vidya.b