மூடப்பட்ட மயிலாடுதுறை காவிரி நகர் ரயில்வே மேம்பாலத்தை திறக்க வலியுறுத்தல்
மயிலாடுதுறை, 12 அக்டோபர் (ஹி.ச.) மயிலாடுதுறை நகரின் முக்கிய நுழைவாயில் என்று கருதப்படும் காவிரி நகர் ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணிக்காக கடந்த 3ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு பாலத்தை மூடப்படும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
Mayiladuthurai Bridge


மயிலாடுதுறை, 12 அக்டோபர் (ஹி.ச.)

மயிலாடுதுறை நகரின் முக்கிய நுழைவாயில் என்று கருதப்படும் காவிரி நகர் ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணிக்காக கடந்த 3ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு பாலத்தை மூடப்படும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக மயிலாடுதுறைக்கு மேற்கு பகுதியிலிருந்து வருவதற்கு மாப்படுகை ரயில்வே கேட் வழி மட்டுமே உள்ளதால் மயிலாடுதுறை நகரில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வழக்கமான தீபாவளி பொருட்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர் சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை வரை பராமரிப்பு பணிகளை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் நிராகரித்துள்ள நிலையில் ரயில்வே மேம்பாலத்தின் இருபுறங்கள் வரை பேருந்து போக்குவரத்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தற்பொழுது நகரின் வர்த்தகம் மொத்தமாக முடங்கி போய்விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

Hindusthan Samachar / ANANDHAN