Enter your Email Address to subscribe to our newsletters
தென்காசி, 12 அக்டோபர் (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்து செல்லும் நிலையில், விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்காக பழைய குற்றாலம் பகுதிக்கு வருகை தந்த 3 இளைஞர்கள் வனத்துறை சோதனை சாவடியில் வன ஊழியர்களின் சோதனைக்கு ஒத்துழைக்காமல், அத்துமீறி நுழைந்து வன ஊழியர்களை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இது தொடர்பாக வன ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த நிலையில், விரைந்து வந்த அதிகாரிகள் அந்த நபர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த வினோத்குமார், ராஜபாளையம் பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன், ராஜு என்பதும், அவர்கள் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து, அவர்கள் மீது அத்துமீறி நுழைந்து வன ஊழியர்களிடம் பிரச்சினையில் ஈடுபட்டதாக கூறி வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN