Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 12 அக்டோபர் (ஹி.ச.)
குழந்தைகளுக்கு போலியோ நோய் வராமல் தடுக்க நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் தமிழ்நாட்டிலும் இந்த முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இன்று (அக் 12) குறிப்பாக 6 மாவட்டங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. இந்த முகாம்கள் மூலம் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
போலியோ வைரஸ் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்ட மாவட்டங்களான செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இந்த இன்று முகாம் நடைபெறுகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 5 மணி வரை செயல்படும். பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் பள்ளிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகின்றன.
மற்ற மாவட்டங்களில் அடுத்தக்கட்டமாக சொட்டு மருந்து முகாம் நடத்தப்படவுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுமட்டுமல்லாமல் தற்போது தொலைதூர பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b