Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 12 அக்டோபர் (ஹி.ச.)
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி குற்றம் சாட்டப்பட்ட வடசென்னை வியாசர்பாடியை சேர்ந்த நாகேந்திரன் (55) மீது பல்வேறு கொலை, ஆள்கடத்தல் போன்ற பல வழக்குகள் உள்ளன.
இவர், உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த வியாழக்கிழமை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று (அக் 11) மதியம் மருத்துவர் சாந்தகுமார் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
மாதவரம் மாஜிஸ்திரேட் தீபா மற்றும் தடயவியல் மற்றும் நச்சுயியல் துறை தலைவர் பிரியதர்ஷினி தலைமையில் உடற்கூறாய்வு நடைபெற்றது.
இன்று (அக் 12) காலை அவரது உடலை போலீசார் அவரது மூத்த மகன் அஸ்வத்தாமனிடம் ஒப்படைத்தனர்.
நாகேந்திரனின் உடல் வியாசர்பாடியில் உள்ள வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் வியாசர்பாடியில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நாகேந்திரனின் உடல் முன்பு அவரது இளையமகன் அஜித்துக்கு, ஏற்கெனவே நிச்சயித்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
Hindusthan Samachar / vidya.b