Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 12 அக்டோபர் (ஹி.ச.)
வடசென்னையை தனது கட்டுப்பாட்டில் ரவுடிசத்தால் வைத்திருந்த பிரபல ரவுடி நாகேந்திரன் கடந்த வியாழக்கிழமை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிறையில் இருந்தவாறு பல கொலைகளை செய்து தனது கட்டுப்பாட்டில் ஒரு குறிப்பிட்ட ரவுடி பிரிவினரை வைத்திருந்ததால் எப்போதும் இவர் பிரபலமாக பேசப்பட்டவர்.
அந்த வகையில் கடைசியாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1 குற்றவாளியாக இவர் சேர்க்கப்பட்டார். கல்லீரல் பிரச்சனை மற்றும் பல்வேறு உடல் உபாதைகள் காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மரணத்திற்காக சிறையில் இருந்த இவரது இரண்டு மகன்களான அஸ்வத்தாமன் மற்றும் அஜித் ராஜ் ஆகிய இருவரும் தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளனர்.
நேற்று நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பிரேத பரிசோதனை முடிந்து மேஜிஸ்ட்ரேட் விசாரணையும் முடிந்து நேற்று மாலை இவரது உடல் ஒப்படைக்க படும் என எதிர்பார்த்த நிலையில் பாதுகாப்பு காரணங்களால் அவரது உடல் நேற்று மருத்துவமனையிலேயே வைத்து இன்று காலை தற்போது நாகேந்திரனின் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவரது உடல் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் உள்ள நாகேந்திரனின் வீட்டில் தற்போது அவரது உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மதியம் 2 மணி அளவில் வியாசர்பாடி முல்லை நகர் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படுகிறது. நாகேந்திரனின் இறுதி சடங்கிற்காக புளியந்தோப்பு சரகத்தில் உள்ள அனைத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் என சுமார் 200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ