த.வெ.க. திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் நிர்மல்குமார் கைது
கரூர், 12 அக்டோபர் (ஹி.ச.) கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் நடிகர் விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்.பி. விமலா உள
த.வெ.க. திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் நிர்மல்குமார் கைது


கரூர், 12 அக்டோபர் (ஹி.ச.)

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் நடிகர் விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்.பி. விமலா உள்ளிட்டோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.

இந்த குழுவினர் கடந்த சில நாட்களாகக் கரூர் பகுதியில் முகாமிட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றொருபுறம், தமிழக அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.

இந் நிலையில் த.வெ.க.வின் திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலாளர் நிர்மல்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குறித்து அவதூறாகப் பதிவிட்டுள்ளார்.

இதனால் நிர்மல்குமார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிபதி குறித்து அவதூறாகப் பதிவிட்டதாகக் கூறி சாணார்பட்டி காவல்துறையினர் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு குறித்து போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b