Enter your Email Address to subscribe to our newsletters
காரைக்குடி, 12 அக்டோபர் (ஹி.ச.)
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தேர்தல் பிரச்சார பயணம் மதுரையில் இன்று தொடங்குகிறார் தொடர்ந்து நாளை அக்டோபர் 13ஆம் தேதி மாலை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி சாலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாகனத்தில பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இதற்காக சிவகங்கை மாவட்ட பாஜக நிர்வாகிகள் சார்பில் பிரச்சார பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது நாளை மதுரையில் இருந்து வரும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் காரைக்குடியில் முக்கிய போக்குவரத்து மிகுந்த 100 அடி சாலையில் மாலை வாகனத்தில் இருந்தபடி பிரச்சாரம் செய்கிறார்.
தொடர்ந்து மாலை 5 மணிக்கு மேல் நெசவாளர் காலனி உள்ள மக்களிடம் குறைகளை கேட்கிறார்.
இந்த பிரச்சார பயணத்திற்கும், ஹெலிகாப்டர் மூலம் நயினார் நாகேந்திரன் மீது மலர் தூவி வரவேற்கவும் அனுமதி கேட்டு பாஜக மாவட்டத் தலைவர் பாண்டித்துரை தலைமையில் நிர்வாகிகள் காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் ஆஷீஷ் புனியாவிடம் மனு கொடுத்தனர்.
அனுமதி வழங்குவது தொடர்பாக 42 கேள்விகளைக் கேட்டு அதற்கு விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தினர். அனைத்து கேள்விகளுக்கும் உடனடியாக பதில் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது
காரைக்குடிக்கு வருகை தரும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி வரவேற்பு கொடுப்பதற்கு மட்டும் இதுவரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் அனுமதி வழங்கவில்லை அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பாஜகவினர் உள்ளனர்.
Hindusthan Samachar / Durai.J