டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம்-அடுத்த 2 நாளில் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
சென்னை, 12 அக்டோபர் (ஹி.ச.) டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் 4-வது நாளாக தொடரும் நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர டேங்கர் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இ
Lorry


சென்னை, 12 அக்டோபர் (ஹி.ச.)

டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் 4-வது நாளாக தொடரும் நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர டேங்கர் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் பவனில் இன்று அல்லது நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

வேலை நிறுத்தம் அடுத்த இரண்டு நாள் தொடர்ந்தால் lpg gas தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கடந்த நான்கு நாட்களில் வெறும் 50 லாரிகள் மட்டுமே லோட் ஏற்றப்பட்டுள்ளதாகவும், இது நுகர்வோர் தேவைக்கு போதுமானதாக இருக்காது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ