Enter your Email Address to subscribe to our newsletters
நெல்லை, 12 அக்டோபர் (H.S.)
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முதுகலை பட்டதாரி உதவியாளர் தேர்வு 2025, திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது.
பாளையங்கோட்டை தெற்கு பஜார் சாலையில் அமைந்துள்ள குழந்தை இயேசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு நடந்துகொண்டிருந்தபோது, தேர்வர் ஒருவரின் புகைப்படம் மாறியிருந்ததாக புகார் எழுந்தது.
இது ஆள்மாறாட்ட முயற்சியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
புகாரைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,
தேர்வர் ஒருவரின் புகைப்படம் மாறியிருப்பது குறித்து புகார் வந்துள்ளது.
அது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் எனத் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் தேர்வு மையத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் இந்தத் தேர்வுக்காக மொத்தம் 5527 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 5075 பேர் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர்; 452 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், ஆள் மாறாட்டம் புகார் தவறான தகவல்.
ஆள் மாறாட்டம் செய்ததாக யாரையும் பிடிக்கவில்லை என திட்டவட்டமாக
தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN