தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்காசி நகரின் பல்வேறு பகுதிகளில் அலைமோதும் பொதுமக்கள் கூட்டம்
தென்காசி, 12 அக்டோபர் (ஹி.ச) தீபாவளி பண்டிகையானது அடுத்த வாரம் திங்கட்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தற்போது முதலே பொதுமக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை த
Tenkasi Diwali Shopping


தென்காசி, 12 அக்டோபர் (ஹி.ச)

தீபாவளி பண்டிகையானது அடுத்த வாரம் திங்கட்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தற்போது முதலே பொதுமக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

அந்த வகையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பொதுமக்கள் தீபாவளி பண்டிகைகளுக்கு தேவையான புத்தாடைகள், பட்டாசுகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தென்காசி மாவட்டம் தென்காசி நகரப் பகுதியில் உள்ள பஜார் வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் என்பது அலைமோதி வருகிறது.

குறிப்பாக, தென்காசி நகரப் பகுதியில் உள்ள சன்னதி பஜார், மற்றும் கூலக்கடை பஜார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது பொதுமக்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக காணப்பட்டு வரும் நிலையில், நகரப் பகுதியில் உள்ள அனைத்து ஜவுளிக்கடைகள், பட்டாசு கடைகள் உள்ளிட்டவைகளில் பொதுமக்கள் கூட்டமானது அலைமோதி வருகிறது.

இதன் காரணமாக வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகி உள்ள நிலையில், நகரப் பகுதியில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வரும் நிலையில், அதனை சரி செய்யும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN