யானை நடமாட்டம் காரணமாக சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை - வனத்துறை அறிவிப்பு
தேனி, 12 அக்டோபர் (ஹி.ச.) தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவி மிக சிறந்த சுற்றுலா தலமாக மட்டுமின்றி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் புனித தலமாகவும் இருந்து வருகிறது. சுருளி அருவியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை கா
யானை நடமாட்டம் காரணமாக சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை - வனத்துறை அறிவிப்பு


தேனி, 12 அக்டோபர் (ஹி.ச.)

தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவி மிக சிறந்த சுற்றுலா தலமாக மட்டுமின்றி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் புனித தலமாகவும் இருந்து வருகிறது.

சுருளி அருவியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக நீராடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில் அருவியை சுற்றி உள்ள வனப்பகுதியில் யானைகள் மற்றும் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகிறது.

இதன் காரணமாக சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிக்கு செல்லும் சாலை அருகே யானை நடமாட்டம் உள்ளதால் வனத்துறை தடை விதித்துள்ளது.

விடுமுறை தினம் என்பதால் பல்வேறு ஊர்களில் இருந்து அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Hindusthan Samachar / vidya.b