தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி என் எஸ் பி சாலையில் தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்க குவியும் மக்கள்
திருச்சி, 12 அக்டோபர் (ஹிச) தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 8நாட்களே உள்ள நிலையில் திருச்சியின் வணிக மையமாக திகழும் சிங்காரத்தோப்பு, என்எஸ்பி ரோடு மற்றும் பெரிய கடைவீதி பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகள் மற்றும் ஷோரூம்களில் ரெடிமேட் ஆடைகள் வாங்கவும், தள்ளு
Trichy Diwali Shopping


திருச்சி, 12 அக்டோபர் (ஹிச)

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 8நாட்களே உள்ள நிலையில் திருச்சியின் வணிக மையமாக திகழும் சிங்காரத்தோப்பு, என்எஸ்பி ரோடு மற்றும் பெரிய கடைவீதி பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகள் மற்றும் ஷோரூம்களில் ரெடிமேட் ஆடைகள் வாங்கவும், தள்ளுபடியில் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கவும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அதேநேரம், தரைக்கடைகளில் பல புதிய ரகங்கள் குவிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலானோர் ஆடைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும்விதமாக மாநகர காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த காவல் கட்டுப்பாட்டு அரை அமைக்கப்பட்டுள்ளது.

8 இடங்களில் கண்காணிப்புகோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1327 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டைக் காட்டிலும் 114 கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளது.

ஒருவார காலத்திற்கு போக்குவரத்து காவலர்கள் 50 பேரும் சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசார் 50 பேரும் என 100 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

பண்டிகை நெருங்கும் சமயத்தில் ஊர்க்காவல் படையினர் மற்றும் போலீசார் கூடுதலாக பணியமறுத்தப்படுவார்கள்.

Hindusthan Samachar / ANANDHAN