Enter your Email Address to subscribe to our newsletters
வாஷிங்டன், 12 அக்டோபர் (ஹி.ச.)
உலகின் மிகவும் உயர்ந்த நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நோபல் பரிசு கனவு தகா்ந்தது.
இது குறித்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
அப்போது அவர்,
லட்சக்கணக்கான மக்கள் உயிர்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி என பெருமிதம்.
நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட மரியா கொரினா என்னிடம் தொலைபேசியில் அழைத்து பேசினார். அப்போது அவர் நோபல் பரிசை எனக்கு அர்ப்பணிப்பதாகவும், நீங்கள்தான் இதற்கு தகுதியானவர் என தெரிவித்தார்.
இருப்பினும் நான் நோபல் பரிசை எனக்கு தாருங்கள் என கேட்கவில்லை. நோபல் பரிசை மரியா பெறுவது சரிதான். ஏனென்றால் அவருடைய போராட்டத்தில் நானும் பங்கு கொண்டு உதவி செய்து வருகிறேன். போர்களை நிறுத்தி லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றியதே மகிழ்ச்சியாக உள்ளது. அந்த மனநிறைவே எனக்கு போதுமானது.
என்றார்.
Hindusthan Samachar / JANAKI RAM