சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8500 கன அடியாக உயர்வு
திருவண்ணாமலை, 12 அக்டோபர் (ஹி.ச.) திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாத்தனூர் அணை உள்ளது. இன்று இந்த அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8500 கன அடியாக உள்ளது. இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவத
சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8500 கன அடியாக உயர்வு


திருவண்ணாமலை, 12 அக்டோபர் (ஹி.ச.)

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாத்தனூர் அணை உள்ளது. இன்று இந்த அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8500 கன அடியாக உள்ளது.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் அணையின் ஒழுங்குமுறை விதிகளின்படி இன்று (12.10.2025) முதல் வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அன்று முதல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது (12.10.2025 காலை 6 மணி) வினாடிக்கு 6000 கனஅடி நீர் வெளியற்றப்பட்டு வருகிறது.

சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையின் காரணமாகவும், கிருஷ்ணகிரி அணையிலிருந்து வினாடிக்கு 7000 கனஅடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றபடுவதலும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8500 கன அடியாக உள்ளது.

எனவே அணையிலிருந்து காலை 9.00 மணியளவில் வினாடிக்கு 9000 கன அடி அளவு வரை உபரி நீர் வெளியேற்ற படலாம் என தெரிவித்துக்கொள்ளபடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b