Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 12 அக்டோபர் (ஹி.ச.)
விபத்து காப்பீடு தொகை ரூபாய் 4 லட்சத்தை அபகரிக்க தொழிலாளி குத்தி கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக மைத்துனர் மற்றும் தங்கையை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை, மதுக்கரை தண்டபாணி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் தொழிலாளி, இவருடைய தங்கை அஞ்சு இவர் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மணிகண்டனின் தாய் விபத்தில் இறந்து போனார்.
விபத்து காப்பீடு செய்து இருந்ததால் காப்பீடு தொகை ரூபாய் 12 லட்சம் வந்தது.
இதில் மணிகண்டன் மற்றும் அவருடைய சகோதரிகள் இரண்டு பேர் என மூன்று பேருக்கும் தலா ரூபாய் 4 லட்சம் பிரித்துக் கொண்டனர்.
மணிகண்டன் அவருக்கு வங்கி மூலம் வந்த பணத்தை தங்கை அஞ்சுவின் கணக்கிற்கு அனுப்புமாறு அந்த பணத்தை பின்னர் வாங்கிக் கொள்வதாகவும் தெரிவித்து உள்ளார்.
இதனால் தங்கை அஞ்சுக்கு மொத்தம் ரூபாய் 8 லட்சம் வந்தது.
அஞ்சுக்கு வந்த ரூபாய் 4 லட்சத்தை எடுத்துக் கொண்டதுடன், அண்ணனின் ரூபாய் 4 லட்சத்தையும் எடுத்து கணவருடன் சேர்ந்து ஆடம்பரமாக செலவு செய்து உள்ளார்.
இந்த பணத்தை கேட்டால் மணிகண்டன் தீர்த்து கட்டவும் திட்டம் தீட்டினர்.
சம்பவத்தன்று கணவன் மனைவி சண்டை போடுவது போல் நடித்து உள்ளனர்.
மனைவி அஞ்சு வீட்டு அறையில் வைத்து கணவர் அஜித் குமார் பூட்டி உள்ளார்.
இதனை அறிந்த மணிகண்டன் தனது தங்கையை பூட்டி வைத்தது ஏன் ? என்று மைத்துணரிடம் கேட்டு உள்ளார்.
இதில் ஏற்கனவே திட்டமிட்டபடி அஜித்குமார், மணிகண்டனின் இடுப்பு, முதுகு, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் பரமாறியாக கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
படுகாயம் அடைந்த மணிகண்டன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மணிகண்டன் இறந்து போனார்.
மணிகண்டன் படுகாயம் அடைந்த நிலையில் தங்கை அஞ்சு, அவரது கணவர் மாட்டிக் கொள்வாரோ? என்று கருதி காவல் துறையில் புகார் செய்யவில்லை, இது பற்றி விவரம் தெரிந்ததும் மணிகண்டனின் மற்றொரு சகோதரி தீபா மதுக்கரை காவல் துறையில் புகார் செய்தார்.
ஏற்கனவே மைத்துனர் அஜித்குமார் தலைமுறைவாக இருந்த நிலையில் மணிகண்டன் இறந்த தகவலை தொடர்ந்து தங்கை அஞ்சும் தலைமறைவானார்.
இந்த நிலையில் மதுக்கரை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் தேடி வருகின்றனர்.
ரூபாய் 4 லட்சம் பணத்தை அபகரிக்கும் நோக்கில் திட்டமிட்டு நடந்த இந்த கொலை கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / V.srini Vasan