அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையை 3 புயல்கள் தாக்கும் என கணிப்பு
புதுச்சேரி, 13 அக்டோபர் (ஹி.ச.) புதுச்சேரியில் ஆண்டு தோறும் சராசரியாக 1, 330 மி.மீ. மழை பதிவாகும். தென்மேற்கு பருவமழை காலத்தைவிட வடகிழக்கு பருவமழை காலத்தில் புதுச்சேரியில் மழை பதிவு அதிகமாக இருக்கும். நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அ
அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையை 3 புயல்கள் தாக்கும் என கணிப்பு


புதுச்சேரி, 13 அக்டோபர் (ஹி.ச.)

புதுச்சேரியில் ஆண்டு தோறும் சராசரியாக 1, 330 மி.மீ. மழை பதிவாகும்.

தென்மேற்கு பருவமழை காலத்தைவிட வடகிழக்கு பருவமழை காலத்தில் புதுச்சேரியில் மழை பதிவு அதிகமாக இருக்கும்.

நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பதிவாகியுள்ளது. மொத்தமாக 575.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கூடுதலாக 173.4 மி.மீ. மழை பெய்துள்ளது.

புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியதாவது:-

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரியை விட அதிகமாக இருக்கும். தென்மேற்கு பருவமழை சீசனில் கூட இயல்பைவிட அதிகமாக மழை பெய்துள்ளது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியவுடன் கன மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும். 2 முதல் 3 புயல்கள் தாக்ககூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM