Enter your Email Address to subscribe to our newsletters
திருப்பூர், 13 அக்டோபர் (ஹி.ச.)
திருப்பூர், தாராபுரம் சாலையைச் சேர்ந்தவர் கணேசன். இவர் மினரல் வாட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரது செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆசாமி குறைந்த வட்டிக்கு ரூபாய் 50 லட்சம் முதல் ரூபாய் 1.5 கோடி வரை கடன் தருவதாகவும், இதன் மூலம் கம்பெனியை மேம்படுத்தலாம் என்றும் ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார். மேலும் செல்போனில் பேசி ஆசாமி தன்னை லோகு என்றும் கடனுக்கான கட்டணம் ரூபாய் 2 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
இது பற்றி உறவினரிடம் கணேசன் மோசடி ஆசாமிகள் ஏமாற்ற திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது, என்றும் தெரிவித்து உள்ளார். தன்னை போல் மேலும் பலரிடம் போன் செய்து மோசடி செய்யும் ஆசாமிகளை காவல்துறை பிடித்துக் கொடுக்க கணேசன் விரும்பினார்.
கோவை வந்த அவரிடம் செல்போனில் பேசிய ஆசாமியிடம் தொடர்பு கொண்டு உள்ளார். சவுரிபாளையம் பிரிவுக்கு வரச் சொல்லி உள்ளனர். அதன்படி மோசடி கும்பலைச் சேர்ந்த ஒரு ஆசாமி கணேசனை சந்திக்க வந்து உள்ளார். தன்னிடம் கையில் பணம் இல்லை, என்றும் ஏ.டி.எம் மில் பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு கணேசன் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். துணை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் காவல்துறையின் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று மோசடி ஆசாமியை மடக்கிப் பிடித்தனர். அவர் ரத்தினவரியை சேர்ந்த ஈஸ்வரன் என்று தெரியவந்தது.
இவர் மீது பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் மேலும் பல மோசடி வழக்குகள் உள்ளன. கைதான ஈஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மோசடி தலைமை வகித்த லோகு தப்பி ஓடி விட்டார்.
அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / V.srini Vasan