Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 13 அக்டோபர் (ஹி.ச.)
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக முதல்வர் அமைத்த அருணா ஜெகதீசன் குழுவை உச்ச நீதிமன்றம் விமர்சிக்கவில்லை என மூத்த வழக்கறிஞர் வில்சன் பேட்டியளித்துள்ளார்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் உச்ச நீதிமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை சிபிஐ மேற்கொள்ளலாம் என்றும் அந்த விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு கண்காணிக்கும் என தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள் அதே நேரத்தில் மனு தாக்கல் செய்த இரண்டு பேர் தங்களது அனுமதி இல்லாமல் போலியாக மனுதாக்கல் செய்து இருக்கிறார்கள்.
இதை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கிறோம் அது தொடர்பாக தனியாக மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் கொடுத்திருக்கிறது. அந்த மனுக்கள் போலியானதாக தாக்கல் செய்யப்பட்டிருந்தால் தற்போது உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்கக்கூடிய உத்தரவு கூட ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது எனக் கூறினார்.
மேலும் கரூரில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்காக உச்ச நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில எதுவுமே செய்யவில்லை மாறாக தங்களை பாதுகாத்துக் கொள்ளவே கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உச்சநீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள் என விமர்சனங்களை முன்வைத்தார்.
மேலும் தமிழ்நாடு முதல்வர் அமைத்த அருணா ஜெகதீசன் தலைமையிலான குழு மீது உச்சநீதிமன்றம் எந்த ஒரு விமர்சனங்களையும் முன் வைக்கவில்லை அருணா ஜெகதீசன் தலைமையிலான குழு நடத்திய விசாரணை அறிக்கை சிபிஐ அமைப்பிடம் ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கிறது இதன் மூலமாக ஒரு நபர் விசாரணை ஆணையம் சரியாக நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எந்த ஒரு நன்மையும் ஏற்படவில்லை எனக் கூறினார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து உத்தரவை பெற்றதாக ஆதவ் அர்ஜுனா கூறி இருப்பது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை உயர்நீதிமன்றத்தை இவ்வாறு ஆதவ் அர்ஜுனாவும் தமிழக வெற்றி கழகமும் குறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது அது மிகவும் தவறானது என தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ