Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 13 அக்டோபர் (ஹி.ச.)
திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட்ட தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக திமுகவின் பொருளாளர் டி ஆர் பாலு தொடர்ந்து அவதூறு வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் டி ஆர் பாலுவினை குறுக்கு விசாரணை செய்வது தொடர்பாக அண்ணாமலை நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அப்பொழுது அவர் பேசுகையில்,
குறுக்கு விசாரணையில் இரண்டு மூன்று வாதங்களை செய்திருக்கிறோம். நீதி மன்றத்தில் நாங்கள் ஒரு மெமோ பைல் செய்திருக்கிறோம்.அடுத்த வாய்தாவில் நானே வழக்கை நடத்துகிறேன் என நீதிபதியிடம் கூறினோம். அதற்கு பால் கனகராஜ் உதவி புரிவார்கள் என முறையீடு செய்ததாகவும் அதற்கு நீதிபதி அனுமதி கொடுத்துள்ளார் என அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர் அடுத்த குறுக்கு விசாரணை நவம்பர் 11 ஆம் தேதி நடைபெறுகிறது,அன்று நானே ஆஜராகி, திமுக பைல்ஸ் உள்ளிட்ட பல விஷயங்களை நான் பேச உள்ளேன். ஆர் பாலு சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் நீதிபதி முன்பு கூற இருப்பதாகவும் அவரது
கடந்த 40 ஆண்டுகால வரலாற்றை முழுமையாக கோர்ட்டு மூலமாக தமிழக மக்கள் தெரிவிக்க இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் நம்முடைய நோக்கம் எல்லாம் தமிழகத்தில் இருக்கும் ஊழல் பெருச்சாளிகள் வெளியே கொண்டு வந்து அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதே அதனால்தான் நான் யாரின் மீதும் இதுபோன்ற அவதூறு வழக்கு தொடுக்கவில்லை திமுகவினர்கள் யாராவது என் மீது வழக்கு தொடர்வார்கள் என எதிர்பார்த்தேன் அந்த வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் அது இப்ப நடந்தேறி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
கரூரில் 41 பேர் உயிரிழந்தது விவகாரம் தொடர்பாக,சிபிஐ விசாரணை வேண்டும் என்பது நமது நோக்கம், அப்பொழுதுதான் விசாரணை முழுமையாக அனைவருக்கும்.
கூட்டத்தில் யாராவது மர்ம நபர்கள் கலந்து கொண்டார்களா யார் வந்து போனார்கள் என அனைத்தையும் தெரிந்து கொள்வதற்கு அதற்கான பயிற்சி பெற்ற ஏஜென்சி வேண்டும் என நினைத்துதான் சிபிஐ விசாரணை கேட்டதாகவும் , பாஜகவின் வழக்கறிஞர் ஒருவரும், மாமன்ற உறுப்பினர் ஒருவரும் தனித்தனியாக அவரது விருப்பத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்ததாகவும் , இன்று அந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருப்பதும், கூடுதலாக உச்சநீதிமன்ற மேற்பார்வையில் இந்த விசாரணை நடைபெறுவதற்கு அதிகாரிகள் நியமித்திருப்பதன் வரவேற்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இதில் சம்பாதிப்பட்டவர்கள் அதிகாரிகளாக இருந்தால் கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இருக்க கூடாது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்களை கூட தவறான முறையில் வழிநடத்தி இருக்கிறார்கள்.எனவே அவர்களை தவறாக வழி நடத்துபவர்களை கூட உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்.
நீதிமன்றம் அவர்களது கடமையை செய்கிறார்கள்.இன்று எல்லா தரப்பு கட்சிகளும் வைத்திருக்கும் வாதங்களும் இன்று தீர்ப்பில் வந்துள்ளது. குறிப்பாக தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்று நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அதே சமயம் பாஜகவின் சார்பில் சிபிஐ விசாரணை தேவை எனவும் வழக்கு தொடர் பட்டிருந்தது இவை அனைத்திற்கும் இந்த தீர்ப்பு வரும் முன்னுதாரணமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கரூரில் வருகின்ற 17 ஆம் தேதி TVK சார்பில் விஜய் வருகிறார் என கூறி நிறைய திருமண மண்டபத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.பாஜக சேர்ந்த திருமண மண்டபங்களுக்கும் அனுமதி கிடைத்துள்ளது.
அவர்கள் எங்களிடம் கொடுக்கலாமா என்று கேட்கும் போது கூட நாங்கள் இதனை கட்சிக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று தான் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.
எனவே எதற்காக அனுமதி மறுக்க படுகிறது? விஜய் அங்கே செல்வது அவரது உரிமை, காவல்துறை அனுமதி கொடுப்பது அவர்களது கடமை.
முதல்வரை பொறுத்தவரை சிபிஐ விசாரணை வேண்டும் என பல முறை எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது கேட்டிருந்தார். அப்போது ஏன் சீமான் அவர்கள் இதனை கேட்கவில்லை?
இன்று சிபிஐ விசாரணை வேண்டும் என உச்சநீதி மன்றம் சிறப்பாக செயல்பட்டுள்ளது
எதிர்க்கட்சியாக இருக்கும் போது சிபிஐ விசாரணை வேண்டும் என முதல்வர் கேட்கும் போது, ஆளும் கட்சியாக இருக்கும் போது ஏன் வேண்டாம் என கூறுகிறார்கள்
சிபிஐ விசாரணைக்கு ஏன் சீமான் அண்ணன் ஏன் பதட்டப் படுகிறார் என தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b