பா.ஜ.க எம் எல் ஏ வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பு
கோவை, 13 அக்டோபர் (ஹி.ச.) பா.ஜ.க எம் எல் ஏ வானதி ஸ்ரீனிவாசன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, கர்ர்பிணி பெண்களுக்கு ஆரோக்கியமான வாழ்வை அமைக்க தாய்மை திட்டத்தை துவக்கி உள்ளோம். திராவிட மாடல்
BJP MLA Vanathi Srinivasan Press Meet


BJP MLA Vanathi Srinivasan Press Meet


கோவை, 13 அக்டோபர் (ஹி.ச.)

பா.ஜ.க எம் எல் ஏ வானதி ஸ்ரீனிவாசன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,

கர்ர்பிணி பெண்களுக்கு ஆரோக்கியமான வாழ்வை அமைக்க தாய்மை திட்டத்தை துவக்கி உள்ளோம்.

திராவிட மாடல் ஆட்சி சமூக நீதி சமத்துவம் பெண் உரிமை என பேசுகின்ற ஆட்சியில் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் மட்டுமல்லாது பெண்களுக்கு மத்திய அரசு மூலம் கிடைக்கின்ற திட்டங்களை கூட சேர விடாமல் செய்கின்றனர்.

செயல்படுத்துதில் முற்றிலும் மாறாக நடந்து கொள்கின்றனர். தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்து விட்டு அதற்காக போராடுபவர்களை அடக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

கரூர் விவகாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு , நியாயம் வேண்டும் என நினைக்கிறோம், அதனை அரசியல் என நினைத்தால் நினைத்துக் கொள்ளுங்கள்.

கூட்டணி அமையும் போது சிலர் சில கருத்தை சொல்லத்தான் செய்வார்கள்.

அ.தி.மு.க பொதுச் செயலலர் எடப்பாடி பழனிச்சாமி பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் துவங்கிய பரப்புரை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் , எதிர்கட்சி சட்டமன்ற துணைத் தலைவர் உதயகுமார் , முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ஆகியோர் கலந்து கோண்டு உள்ளனர்.

சுயமரியாதை பேசும் தி.மு.க வில் துணை முதல்வர் உதய்நிதி ஸ்டாலின் காலில் வயது அதிகாமான நபர் விழும் காட்சிகளேல்லாம் நடைபெறுகிறது. துணை முதல்வர் என்ற பதவியை தாண்டி அவருக்கு என்ன உள்ளது.

சட்டமன்றத்தில் எதிர்கட்சியினர் தரப்பில் கரூர் சம்பவம் எதிரொலிக்கும்.

கோவையில் 28 ஆம் தேதி துணை குடியரசுத்தலைவர் நிகழ்வு நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்

Hindusthan Samachar / V.srini Vasan