Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 13 அக்டோபர் (ஹி.ச.)
தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
பண்டிகை பருவத்தை முன்னிட்டு ஆபரணங்கள் வாங்க திட்டமிடும் பொதுமக்களுக்கு இந்த திடீர் விலை மாற்றம் கூடுதல் சுமையாக அமைந்துள்ளது.
அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ஒரு கிராம் ரூ. 25 விலை உயர்ந்து ரூ.11,525-ஆகவும், ஒரு சவரன் 200 உயர்ந்து. சவரன் விலை ரூ.92,200-ஆகவும் விற்பனையாகிறது
தங்க விலை உயர்வுக்கான முக்கிய காரணங்களில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்ததுடன், இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்திருப்பதும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனை தொடர்ந்து வெள்ளியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்று வெள்ளி விலை ஒரே அடியாக கிராமுக்கு ரூ.5 உயர்ந்த நிலையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,95,000-க்கு விற்பனையாகிறது. வரும் நாட்களில் தங்க விலை மேலும் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு வியாபாரிகள் மத்தியில் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ