Enter your Email Address to subscribe to our newsletters
புதுடில்லி, 13 அக்டோபர் (ஹி.ச.)
1969ம் ஆண்டு முதல் உள்துறை அமைச்சகத்தின் ஒரு விமானப் பிரிவை இயக்கும் பணிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தப் படையானது, தேசிய பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் துணை ராணுவப் படையினருக்கு தேவையான பணிகளையும் செய்து வருகிறது.
இந்த நிலையில், எல்லைப் பாதுகாப்புப் படையின் 'ஏர்விங்' பிரிவில் 50 ஆண்டுகளில் முதல் முறையாக பெண் விமான இன்ஜினியராக இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் 4 ஆண் அதிகாரிகளுடன் சேர்த்து இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்ரிக்கு, விமானத்தில் பறப்பதற்கான பேட்ச்சை எல்லைப் பாதுகாப்புப் படையின் இயக்குநர் தல்ஜித் சிங் சவுத்ரி வழங்கியிருந்தார்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது;
அண்மை காலமாக பிஎஸ்எப் விமானப் படையின் எம்ஐ-17 ஹெலிகாப்டர் குழுவில் விமான இன்ஜினியர்களுக்கான பற்றாக்குறை நீண்ட காலமாக நிலவி வருகிறது. இந்திய விமானப்படை முதற்கட்டமாக, 3 கீழ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்திருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால், 5 பேர் கொண்ட இரண்டாவது கட்ட குழுவுக்கு பயிற்சி வழங்க முடியாமல் போனது.
அதன் பிறகு, பிஎஸ்எப் தனது 'ஏர்விங்' பிரிவுக்காக விமான இன்ஜினியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டது. அதன் பேரில், இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்ரி உட்பட ஐந்து பேர், ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிய பயிற்சியை நிறைவு செய்தனர். பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள நிவாரணப் பணிகளுக்கு விமானங்களை இயக்கி பயிற்சி பெற்றுள்ளனர்.
இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்ரி தான் பிஎஸ்எப் விமானப் படையின் முதல் பெண் விமான இன்ஜினியர் ஆவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / JANAKI RAM