Enter your Email Address to subscribe to our newsletters
புதுடெல்லி, 13 அக்டோபர் (ஹி.ச)
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் (வயது 39) தாத்ரா மற்றும் நகர் அவேலி யூனியன் பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார். 2018ம் ஆண்டு கேரள வெள்ள மீட்பு பணியில் தன்னார்வலராக செயல்பட்டு பலரின் பாராட்டுகளை பெற்றவர்.
2019 ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்ட பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சமூக ஆர்வலராக தனது பணியை தொடர்ந்து வந்த கண்ணன் கோபிநாத் இன்று (அக் 13) காங்கிரசில் இணைந்தார். டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் கோபிநாத் காங்கிரசில் இணைந்தார்.
இந்த நிகழ்ச்சியில் கே.சி.வேணுகோபால் கூறுகையில்,
இந்த நாட்டின் தாழ்த்தப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட, நீதி, அன்பு மற்றும் பாசத்திற்காக எப்போதும் போராடிய துணிச்சலான அதிகாரிகளில் ஒருவரான கண்ணன் கோபிநாதன் காங்கிரசில் இணைவது மிகவும் மகிழ்ச்சியான தருணம்
இந்த நாட்டிற்காக நீதிக்காகப் போராடும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. அவர் 2019 இல் சிவில் சர்வீசஸ் பதவியை ராஜினாமா செய்தார், ஆனால் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று அவர் கூறுகிறார். நீதிக்காகவும் ஒதுக்கப்பட்ட மக்களுக்காகவும் போராடும் அதிகாரிகள் அமைப்பால் தண்டிக்கப்படுகிறார்கள். தலைமை நீதிபதி கூட தப்பவில்லை. இந்த பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக எழுந்து போராட வேண்டிய நேரம் இது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b