11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியீடு
சென்னை, 13 அக்டோபர் (ஹி.ச.) எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே இருந்து வந்த பொதுத் தேர்வை, பிளஸ்-1 வகுப்புக்கும் கடந்த 2017-18-ம் கல்வியாண்டில் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என்
11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியீடு


சென்னை, 13 அக்டோபர் (ஹி.ச.)

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே இருந்து வந்த பொதுத் தேர்வை, பிளஸ்-1 வகுப்புக்கும் கடந்த 2017-18-ம் கல்வியாண்டில் கொண்டுவரப்பட்டது.

தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நடப்பு கல்வி ஆண்டு முதல் 11ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 2017-18 கல்வி ஆண்டிற்கு முன்னர் இருந்த நடைமுறையே பின்பற்றப்படும்.

இனி ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் அல்லாமல் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மட்டுமே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நடப்பு கல்வி ஆண்டு முதல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதோடு 12ம் வகுப்புக்கு மட்டுமே மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் முந்தைய 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் 2030-ம் ஆண்டு வரை அரியர் தேர்வு எழுதலாம் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b