Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 13 அக்டோபர் (ஹி.ச.)
கோவையில் புதிதாக உப்பிலிபாளையம் முதல் கோல்வின்ஸ் வரை 10.1 கி.மீ தூரத்திற்க்கு உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்திருந்தார்.
இந்த மேம்பாலத்தில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் அதிவேகமாக சென்ற கார் காட்டுபாட்டை இழந்து கோல்டுவின்ஸ் அருகே நின்று கொண்டு இருந்த லாரி மீது பின் பக்கம் மோதியதில் காரில் பயணித்த 20 வயது மிக்க ஒரு பெண் உட்பட இரண்டு ஆண்கள் என மூன்று பேர் சம்பவ இடத்திலே பலியாகினர்.
இதில் அதிவேகமாக சென்ற கார்,லாரி மீது மோதியதில் காரை மீட்கமுடியாமல் போன நிலையில் கோவை பீளமேடு தீயனைப்பு துறை அதிகாரிகள் மற்றும் கோவை தெற்கு தீயணைப்பு துறை அதிகாரிகள் நொறுங்கிய காரை மீட்டு காரில் இறந்தவர்களின் உடலையும் மீட்டும் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இந்த விபத்து குறித்து கோவை பீளமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் இந்த பாலம் திறக்கப்பட்ட போது இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 7 மணி வரை பாலத்தில் செல்ல காவல் துறையினர் தடை விதித்து இருந்த நிலையில் அது சமூக வலைதளத்தில் பேசு பொருளாக இருந்தது எனவே அதுபோன்ற தடை ஏதுமில்லை எனக்கூறி காவல்துறை இரண்டு நாட்களுக்கு முன் இரவிலும் பாலத்தில் பயணிக்கலாம் என கூறிய நிலையில் இன்று அதிகாலை இந்த விபத்து நடந்து இருப்பது குறிப்பிடதக்கது..
Hindusthan Samachar / V.srini Vasan