Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 13 அக்டோபர் (ஹி.ச.)
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து இந்துசமய அறநிலையத் துறையின் சார்பில் காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வர் தமிழகத்தில் பல்வேறு பணிகளை துவக்கி வைத்தார்.
இதேபோல், கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாஸ்டர் பிளான் ரூ33.63 கோடி மதிப்பீட்டிலான, பக்தர்கள் ஓய்வெடுக்கும் மண்டபம், (யாத்திரி நிவாஷ்) பணியாளர்கள் குடியிருப்பு உள்ளிட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மேயர் ரங்கநாயகி, துணைமேயர் வெற்றிச்செல்வன், மருதமலை திருக்கோவில் அறங்காவல் குழு தலைவர் ஜெயக்குமார், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை.செந்தமிழ்ச் செல்வன், துணை ஆணையர் செந்தில்குமார், தர்கார் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / V.srini Vasan